சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு - அதிமுக கண்டனம்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததன் காரணமாக வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2021, 06:53 PM IST
  • ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை!
  • சட்டம் ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு அதிமுக கண்டனம்.
  • "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு - அதிமுக கண்டனம் title=

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததன் காரணமாக வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று(செப்டம்பர்- 13) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நபிகள் நாயகத்தின் கொள்கையை மனதிலே ஏந்தி, சமூக அக்கறையோடு எதிர்கால சமுதாயம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மன வலிமையோடும் இந்த சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வாழ்ந்து வந்த திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த வசீம் அக்ரம் முஸ்லிம்களின் கடமையான ஐந்து வேளை தொழுகையின் ஒரு பகுதியாக, 10.9.2021 அன்று பள்ளிவாசலில் தொழுகை முடித்து தன்னுடைய மகனோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், நட்ட நடுரோட்டில் தன்னுடைய மகன் பிஞ்சுக் குழந்தையின் கண் எதிரே, சமூக விரோதிகளால் கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் மரணச் செய்தி அறிந்ததும் தாங்கொணா துயரமும், தாள முடியா வேதனையும் அடைந்தோம்.

ALSO READ : நீட் ரத்து : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி - அதிமுக காட்டம்

இந்த நாட்டில் சமூக சிந்தனையோடு நல்லதொரு சமுதாயம் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவர் வாழவே முடியாதா? என்ற எண்ணத்தை அவரின் மரணம் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வசீம் அக்ரமை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எந்த வார்த்தைகளைச் சொன்னாலும் இட்டு நிரப்ப முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் இனம்கண்டு, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஒரு நல்ல மனம், சட்டம் - ஒழுங்கைப் பேண முடியாத அரசால் நம்மைவிட்டுச் சென்றிருக்கிறது. அவரின் இழப்பை ஈடுசெய்கின்ற விதமாக தமிழக அரசு அவர்தம் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாகவும், எதிர்காலத்தை நல்ல முறையிலே வழிநடத்திச் செல்ல அவர்தம் குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபருக்கு அரசு வேலையும் வழங்கி, உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதே வேளையில், அதிமுகவின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, அதிமுகவும் அவர்தம் குடும்ப இழப்பிலே தோளோடு தோள் நின்று பங்கெடுத்துக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

ALSO READ : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News