தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
திமுக வெற்றியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. திமுகவின் பிரச்சார மேலாளரான பிரஷாந்த் கிஷோர், திமுக, சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட மிகப்பெரிய தனிக்கட்சியாக வெளிப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறார்.
சென்னை: திராவிட முன்னேற்ற கழகம் பிப்ரவரி இறுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஒரு மகிழ்ச்சியான குறிப்பில் தொடங்கியது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் அதன் கூட்டணி அப்படியே இருந்தது. அகில இந்திய அண்ணா திராவிட முனேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டாளியான பாரதிய ஜனதா கட்சி ஆகியோருக்கு எதிராக அவர்களது நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருந்தது.
ஆனால் ஐந்து நாட்கள் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில், திமுகவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே வேறுபாடுகள் உருவாகியுள்ளன. திமுகவின் தேர்தல் பிரச்சார மேலாளரும் அரசியல் பிரச்சார வித்தகருமான பிரசாந்த் கிஷோர்தான் இந்த நிலைமைக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறார் என்று திமுகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையில் (TN Assebly) 234 இடங்களில் குறைந்தது 180 இடங்களிலிருந்து போட்டியிட திமுக விரும்பியது. மீதமுள்ள 54 இடங்களை தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுவிட அவர்கள் தயாராக இருந்தனர். இதன் பொருள் 30 இடங்களைக் கேட்ட காங்கிரஸ் மற்றும் தலா 10 இடங்களைக் கேட்ட வி.சி.கே, சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் ஐயுஎம்எல் ஆகியவை குறைந்த தொகுதிகளையே பெறுவார்கள் என முன்னரே தெளிவாகியிருந்தது. தற்போது வி.சி.கே மற்றும் சிபிஐ தலா ஆறு இடங்களில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன. சிபிஐ (எம்) ஐந்து இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு வெறும் 18 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.யு.எம்.எல் நான்கு இடங்களைப் பெறலாம்.
திமுக-வின் (DMK) தேர்தல் மேலாளரான பிரஷாந்த் கிஷோர் கூட்டணி கட்சிகளுடன் கடுமையான பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. அவரது பிரச்சார செயலுத்தி குழு திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலினுடன் நெருக்கமாக செயல்படுகிறது.
திமுக வெற்றியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது
திமுகவின் பிரச்சார மேலாளரான பிரஷாந்த் கிஷோர், திமுக, சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட மிகப்பெரிய தனிக்கட்சியாக வெளிப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறார். ஆனால் கூட்டணியின் ஒன்றுசேர்ந்த பலத்தை அவர் ஏன் நம்பவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காங்கிரஸின் (Congress) எண்ணிக்கை உயர்ந்து, திமுக-வின் எண்ணிக்கை 140 இடங்களுக்கு அருகில் இருந்து, திமுக ஆட்சி அமைத்தால், காங்கிகஸ் தலைவர்களால் அரசாங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் குறைபாடுகள் ஏற்படலாம் என திமுக கருதுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?
2014 ல் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதிலிருந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் தொடர்ந்து கட்சி மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சிறந்த அரசியல் வாய்ப்புகளைத் தேடி பாஜகவுக்குச் சென்றுள்ளனர். மிக சமீபத்திய காலங்களில், 2017 ல் கோவா மற்றும் மணிப்பூர் மற்றும் 2020 ல் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் இப்படிப்பட்ட பிரசனைகளை சந்தித்தது. இப்படிப்பட்ட பிரச்சனை தமிழகத்திலும் ஏற்பட்டு அதனால் திமுக-வுக்கு பாதகம் ஏற்படுவதை தவிர்க்க, காங்கிரசுக்கு குறைந்த அளவு தொகுதிகளையே அளிக்க திமுக தேர்தல் மேலாண்மைக் குழு தீர்மானித்தது.
குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் தனிக்கட்சியாக வெற்றிபெற, குறைந்தபட்சம் 180 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று திமுக நம்புகிறது.
திமுகவின் கடுமையான நிலைப்பாடு, 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் மோசமான முடிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்சி 40 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அது எட்டு இடங்களை மட்டுமே வென்றது. திமுக 89 தொகுதிகளில் வென்றது. மாநிலத்தில் இரண்டாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த அதிமுக 134 இடங்களை வென்றது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஏபிபி சி-வாக்காளர் கணக்கெடுப்பு கணித்துள்ள நிலையில், பலவீனமான கூட்டணியைச் சார்ந்து இருக்க திமுக விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தனது எம்.எல்.ஏ-க்கள் மீது திமுக-வுக்கு அதிக அளவு நம்பிக்கை உள்ளது. அவர்கள் கட்சி மாறும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என கட்சி நம்புகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒருவர் திமுக-வில் இருந்துவிட்டு, பாஜக-வுக்கு ஆதரவு அளிக்க அந்த பக்கம் சென்றால், அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விடும் என திமுக நம்புகிறது. தேசிய அளவில் அதன் மிகப்பேரிய எதிரி கட்சியான பாஜக-வை (BJP) விட காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. பாஜக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
திமுக-வைப் பொறுத்த வரை தனது கட்சியின் மீது உள்ள அதிகப்படியான நம்பிக்கையால், இந்த தேர்தலில் அது, கூட்டணி கட்சிகளுக்கு மிகக்குறைந்த தொகுதிகளையே ஒதுக்கியுள்ளது. பெரும்பான்மையுடைய தனிப்பெறும் கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் உயர வெண்டும் என்பதே அதன் இலக்காக உள்ளது. இந்த குறிக்கோளுக்கான அடிக்கல்லை நாட்டியவர் திமுக தேர்தல் பிரச்சார மேலாளர் பிரஷாந்த் கிஷோர் என நம்பப்படுகின்றது. தேர்தலுக்குப் பிறகு திமுக நினைத்த அளவு உயரத்தை அடைந்திருக்குமா? கூட்டணிக் கட்சிகளிடம் காட்டிய இந்த இறுக்கமான போக்குக்கு பலன் இருக்குமா? திமுக-வின் தன்னம்பிக்கை வெற்றி பெறுமா? அல்லது, ‘நாங்கள் முன்னரே கூறினோம்’ என கூட்டணி கட்சிகள் கூறும் நிலை ஏற்படுமா? விரைவிலேயே விடை தெரியும்!!
ALSO READ: தொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்? கைகொடுக்குமா MGR செண்டிமென்ட்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR