புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிடும். இதன் மூலம், கட்சி தனது வேட்பாளரை மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நிறுத்தப் போகிறது. அதிமுக உடன் கூட்டாக பாஜக தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளது.
அதிமுக (AIADMK) மற்றும் பாஜக (BJP) இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை பாஜக கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் (Edappadi Palaniswami) கொடுத்துள்ளனர்.
Bharatiya Janata Party (BJP) to contest 20 seats in the upcoming Tamil Nadu Assembly election and also Kanyakumari seat for Lok Sabha bye-election, in alliance with All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK).
— ANI (@ANI) March 5, 2021
ALSO READ | அதிமுக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல், எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி போட்டி!
இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களை பெற்றுள்ளது.
இதையடுத்து தமிழக சட்டசபைக்கு (TN Assembly Election) ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
ALSO READ | சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR