திராவிட கோட்டையான தமிழகத்தில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள போராடும் தேசியக் கட்சிகள்

முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 2, 2021, 12:50 PM IST
  • பாஜக சில காலமாக தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
  • காங்கிரசும் தமிழ் மக்களைக் கவர பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் நடைபெறும்.
திராவிட கோட்டையான தமிழகத்தில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள போராடும் தேசியக் கட்சிகள்

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலைடில், திராவிட கட்சிகளின் கோட்டையாக இருக்கும் தமிழகத்தில், தங்கள் இருப்பை காத்து உயர்த்திக்கொள்ள தேசியக் கட்சிகளான பாஜக-வும் காங்கிரசும் போராடிக்கொண்டிருக்கின்றன.

234 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தெர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக (AIADMK) 15 தொகுதிகளை வழங்கியுள்ள நிலையில், திமுக காங்கிரசுக்கு 22 தொகுதிகளை வழங்கியுள்ளது. இரு தேசியக் கட்சிகளும் தங்கள் தொகுதிகளை அதிகரிக்க முயற்சிக்கின்றன. ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தொகுதிகளை அதிகரித்துக்கொடுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.

பாஜக சில காலமாக தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாஜக-வைப் (BJP) பொறுத்தவரை தமிழகம் அக்கட்சிக்கு தகர்க்க முடியாத ஒரு கோட்டையாகத்தான் உள்ளது. தன் நிலையை தமிழகத்தில் உயர்த்த பாஜக பல முறைகளைக் கையாண்டு வருகிறது. சமீபத்தில்தான், பாஜக-வின் முன்னாள் மாணவர் அணித் தலைவரான முருகனை கட்சியின் மாநிலத் தலைவராக கட்சி நியமித்திருந்தது.

முருகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜக-வின் தமிழக தலைவராக ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முன்னிறுத்தி தனது சமூக சமநிலை மற்றும் நல்லிணக்க நிலைப்பாட்டை கட்சி வெளிப்படுத்தியது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் சமூகத்துடன் இணைவதற்கான முயற்சியாக, தன் உரைகளில் அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டி வருகிறார்.

ALSO READ: அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா

மோடி தனது சமீபத்திய 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், உலகின் மிக பழமையான மொழியான தமிழை கற்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுவதாகக் கூறினார்.

நாடு முழுவதும் பாஜக அடைந்த தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரதான சூத்திரதாரியாக பரவலாகக் கருதப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்காக தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

பாஜக, தமிழக மக்களை கவர இந்த வகைகளில் முயற்சி செய்யும் அதே வேளையில், காங்கிரசும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காண்பிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காங்கிரஸ் தலைவரும் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்திய காலங்களில் நான்கு முறை தமிழகத்திற்கு விஜயம் செய்து விட்டார்.

திங்களன்று, கன்னியாகுமரியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் வேர்களைக் கொண்டவர்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆளுவார்கள் என்று கூறினார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளுமே தமிழகத்தில் தங்கள் இருப்புக்காக போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இக்கட்சிகளுக்கு சிறிதளவேனும் மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள 2021 சட்டமன்ற தேர்தல்கள் ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கும்.

ALSO READ: Viral Video: பள்ளி மாணவனுடன் ராகுல் காந்தி Push-up சவால் சமூக ஊடகங்களில் வைரல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News