தொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்? கைகொடுக்குமா MGR செண்டிமென்ட்?

அரசியல் களத்தில் குதித்தது முதலே, கமல்ஹாசன் தன்னை புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர்-ரின் வாரிசாக காட்டிக்கொள்ள பெரும் முயற்சிகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 3, 2021, 12:46 PM IST
  • கமல்ஹாசன் ஆலந்தூரிலிருந்தும் கோவை தெற்கு தொகுதியிலிருந்தும் போட்டியிட வாய்ப்புள்ளது.
  • நகர்ப்புறங்களில் 2019 பொதுத் தேர்தலில் எம்.என்.எம் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளைப் பெற்றது.
  • எம்.என்.எம் தேர்தலில் களம் இறக்குவதற்கு வேட்பாளர்களின் நேர்காணலை நடத்தி வருகிறது.
தொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்? கைகொடுக்குமா MGR செண்டிமென்ட்?

தமிழகத் தேர்தலுக்கான தனது கட்சியின் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையின் ஆலந்தூரிலிருந்து தொடங்குவார். ஏப்ரல் 6 நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் ஆலந்தூரிலிருந்தும் கோவை தெற்கு தொகுதியிலிருந்தும் போட்டியிட வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆலந்தூர் தொகுதியை கமல் ஹாசன் தான் போட்டியிட தேர்ந்தெடுத்ததற்கு இரு வேறு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அப்போது பரங்கிமலை தொகுதி என அழைக்கப்பட்ட இந்த தொகுதி, 1967 முதல் 1976 வரை புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர்-ரின் தொகுதியாக இருந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்ப்புற தொகுதிகளில் சுமார் 10 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அரசியல் களத்தில் குதித்தது முதலே, கமல்ஹாசன் தன்னை புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர்-ரின் வாரிசாக காட்டிக்கொள்ள பெரும் முயற்சிகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. எம்.ஹி.ஆர்-ரின் ரசிகர்களை அணுகி அவர்களது ஆதரவை பெறுவதிலும் கமல் ஈடுபட்டு வருகிறார். புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர் வழியில் நடப்பதாக கூறிக்கொள்ளும் ஆளும் அதிமுக, அவரது கனவுகளை நிறைவேற்ற தவறி விட்டது என்றும் கமல் குற்றம் சாட்டினார்.

ALSO READ: TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?

நகர்ப்புறங்களில் 2019 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) அதை அடித்தளமாகக் கொண்டு தன் நடவடிக்கைகளை இன்னும் முடுக்கி விட்டுள்ளது. இந்த வெற்றியே கட்சிக்கான ஆதரவு வேகமாக வளர்ந்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது. எனினும் தமிழக முழுவதுமாகப் பார்த்தால், மக்கள் நீதி மய்யம் சுமார் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.

"எம்.ஜி.ஆரின் பெயரே எனக்கு உற்சாகத்தை அளிக்கும் ஒரு விஷயமாகும். எங்கள் கட்சியின் கோஷமான ‘நாளை நமதே’ என்பது அவரது படத்தின் பெயர்தான்” என்று திரு ஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், அவரிடமிருந்து தான் பல விஷயங்களை கற்றுள்ளதாகவும், தனக்கு அவர் பல அறிவுறைகளை வழங்கியுள்ளதாகவும் கமல் (Kamal Haasan) பல இடங்களில் பல மேடைகளில் கூறி வருகிறார்.

இன்று இரவு 8 மணிக்கு மைலாப்பூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றுவார்.

இதற்கிடையில், அவரது கட்சி தேர்தலில் களம் இறக்குவதற்கு வேட்பாளர்களின் நேர்காணலை நடத்தி வருகிறது. மார்ச் 7 ஆம் தேதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என கட்சி கூறியுள்ளது. வேட்பாளர்களாக விண்ணப்பிக்க ஒரு ஆன்லைன் செயல்முறையை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிமுகப்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட ஆன்லைன் செயல்முறையை ஏற்படுத்திய முதல் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக (DMK) மற்றும் எம்.என்.எம் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி சாத்தியங்களை ஆராய்ந்ததாக ஒரு சலசலப்பு இருந்தாலும், இரு கட்சிகளுமே அதை மறுத்துள்ளனர். மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகர் வி பொன்ராஜ் அவர்களால் தொடங்கப்பட்ட விஷன் இந்தியா கட்சி மற்றும் சட்ட பஞ்சாயத்து போன்ற சில பிராந்திய அமைப்புகள் எம்.என்.எம்-மில் கூட்டாளிகளாக இணைந்துள்ளன.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பாலா கருப்பையாவும் கமல் ஹாசனின் கட்சியில் சேர்ந்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் மக்களுக்கு ஏதுவான ஈ-ஆளுகை ஆகியவற்றின் மீது தங்கள் கட்சியின் முக்கிய கவனம் இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. அரசாங்க திட்டங்களை மக்கள் எளிதாக அணுக உதவும் ஒரு பொது வளமாக அனைத்து வீடுகளிலும் இணையத்துடன் கூடிய இலவச கணினிகள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் ஆகியவை கட்சி அளித்துள்ள வாக்குறுதிகளில் சிலவாகும்.

ALSO READ: TN Assembly Elections 2021: கழகங்களை கலங்கடித்த கமலின் 7 அம்ச தேர்தல் அறிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News