DMK வேட்பாளர் அப்துல்லா மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாகிறார்
சுயேட்சை வேட்புமனுக்கள் தள்ளுபடியான நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார்.
சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு ஒரு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சுயேட்சை வேட்புமனுக்கள் தள்ளுபடியான நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார்.
தமிழக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்டு 24ம் தேதியன்று தொடங்கியது.
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரி (Election Officer) கி.சீனிவாசனிடம் சுயேச்சை வேட்பாளர்கள் ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தி.மு.க (DMK) கட்சி சார்பில் வேட்பாளர் மு.முகமது அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று (செப்டம்பர் முதல் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதுகுறித்து இடைத்தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
ALSO READ | தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில் மிகப்பெரிய தடை லஞ்சம்! தாமதம்!!
இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் 1ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.
ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகிய 3 சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி, தற்போது இந்த இடைத்தேர்தலில் (By-election) தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு மட்டுமே செல்லத்தக்கதாக உள்ளதால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வேட்புமனுவை திரும்பப்பெற செப்டம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப்பெற வேண்டும். ஆனால், தற்போது களத்தில் தி.மு.க. வேட்பாளர் மட்டுமே இருப்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.
தற்போதுள்ள நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே 13ம்தேதி மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறாது என்று கூறப்படுகிறது.
READ ALSO | செப்டம்பர் 01: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR