சென்னை: அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தாலும், என்ஜிஓ கணக்கெடுப்பு ஒன்று நிதர்சன நிலவரத்தை முன் வைத்துள்ளது. மாதிரி சேவை உரிமை மசோதாவையும் ஊழல் எதிர்ப்பு என்ஜிஓ அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த NGO நடத்திய ஆய்வில், தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம், தாமதம் மற்றும் செயல்பாட்டில் இணக்கம் இல்லாதது மிகப்பெரிய தடையாக இருப்பது தெரியவந்துள்ளது. அரசு அலுவலகங்களில், குறிப்பாக இ-சேவை மையங்கள் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதை இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.
சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பதிவுத் துறையில் அதிக ஊழல் இருப்பதாக என்ஜிஓ கணக்கெடுப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் சேவை பெறும் உரிமை சட்டம் மாதிரி மசோதாவை வெளியிட்டது.
Arappor Iyakkam releases the TN Right to Service Model Draft Bill. We will present this to TN Govt for taking this as feedback for RTS bill. Model bill link https://t.co/HEkoTmWM8q pic.twitter.com/9HrseDxwLT— Arappor Iyakkam (@Arappor) September 1, 2021
கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் 93% லஞ்சம் கொடுக்கும்படி கேட்கப்பட்டனர், 82% பேர் சேவையை அணுகும் அனுபவத்தில் அதிருப்தி அடைந்தனர். பதிலளித்தவர்களில் 84% சேவை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முறையீடுகளை சுயாதீன ஆணையம் ஒன்று விசாரிக்க வேண்டும் என்று விரும்பினர். தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களின் பட்டியலைத் தயாரிக்க உதவும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, ஆட்சிக்கு வருபவர்கள், சேவை உரிமை சட்டத்தை (Right to Service Act) நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை இந்த அறப்போர் இயக்கம் கோரியது. இந்தக் கோரிக்கையை போட்டியிட்ட அனைத்து கட்சிகளிடமும் இந்த இயக்கம் முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வெற்றிபெற்ற திமுக இந்த அறிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது. தமிழக ஆளுநரின் தொடக்க உரையில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்கான மாதிரி மசோதாவை இந்த என்ஜிஓ தன்னார்வலர்கள் தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் சட்டங்களின் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த மாதிரி மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
READ ALSO | கோவிட் தடுப்பூசி முதல் டோஸ் 100% போட்டு சாதனை செய்த தமிழக நகரம் இது
வரைவு மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்:
1. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சரியான நேரத்தில் சேவைகளைப் பெறுவதற்கான உத்தரவாத உரிமையாகும்.
2. அரசு அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்கள் தேவையான நேரம், தகுதி, செயல்முறை, நியமன அதிகாரி போன்ற சேவைகளின் பட்டியலைக் குறிப்பிட வேண்டும்.
3. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனிப்பட்ட கண்காணிப்பு எண் வழங்கப்பட வேண்டும், இதைப் பயன்படுத்தி சேவை நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
4. சேவை நிராகரிக்கப்பட்டால், குறிப்பிட்ட காரணம் குறித்து விண்ணப்பதாரருக்கு தபால் மற்றும் ஆன்லைன் முறையில் அறிவிக்கப்பட வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் முப்பது நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் சேவை நிராகரிக்கப்படுவதற்கு எதிராக முறையீடு செய்யலாம்.
6. இந்த மேல்முறையீட்டு நிலை ஒரு ஆன்லைன் போர்ட்டல் (online portal) வழியாகவும் கண்காணிக்கப்படும் (அசல் விண்ணப்பத்தைப் போலவே).
7. மேல்முறையீட்டை பெற்ற 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வது தொடர்பாக மேல்முறையீட்டு ஆணையம் முடிவு செய்ய வேண்டும் மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இதற்கான அறிவுறுத்தலை அனுப்ப வேண்டும். ஆர்டரைப் பெற்ற ஐந்து வேலை நாட்களுக்குள், நியமிக்கப்பட்ட அதிகாரி சேவையை வழங்க வேண்டும்.
ALSO READ | TN corona update District Wise ஆகஸ்ட் 31 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!
8. சேவையை நிராகரித்தல்/பதில் இல்லாமை போன்ற முறையீடுகளுக்கு "தமிழ்நாடு சேவை உரிமை ஆணையம்" என்று அழைக்கப்படும் ஒரு சுயாதீன அமைப்பை மாநில அரசு உருவாக்க வேண்டும்.
9. இந்த அமைப்பை, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
10. விண்ணப்பதாரருக்கு சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அபராதத் தொகையில் 90% முதல் 500 வரை இழப்பீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
மாநில சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன், மக்களின் கருத்துக்களைப் பெற வரைவு மசோதாவை பொதுமக்கள் முன் வைக்குமாறு அரசாங்கத்தை அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Also Read | Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR