தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் திமுக அரசு, அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை நிறுத்த வேண்டும் என அதிமுக இணை பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடந்த  சில சம்பவங்கள் அவரது இந்த அறிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் திரு. சரவணன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். ஆளும் கட்சியான திமுக (DMK) அவருக்கு பல வித தொல்லைகளை அளித்ததாகவும், அதனால் அவர் பல வித இன்னல்களுக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளிவந்தன. 


இந்த தொல்லைகளைத் தொடர்ந்து, ஆளும் கட்சி மூலம் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அவர் 60 நாட்களுக்கான ஈட்டா விடுப்பில் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் தற்போது பொது வெளியில் வெளியாகி பெரும் சலசலப்பபை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த கடிதத்தில் ஆளும் கட்சியின் பல வற்புறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் பற்றி அவர்குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் செய்யாத வேலைகளையும் சேர்த்து ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், சூரியசக்தி மின்விளக்கு திட்டத்தில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 



ALSO READ: Ration Card: தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறும் வழிமுறை 


திட்டப்பட்டியலில் இல்லாத பல தீர்மானங்களை நிறைவேற்றியதாக கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தான் விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ததகாவும், இதன் காரணமாக ஆளும் கட்சியினர் தனக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் சரவணம் தெரிவித்துள்ளார். 


இந்த அழுத்தம் காரணமாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தனக்கு விடுப்பு தேவைப்படுகிறது என்பதால், தனக்கு 60 நாட்கள் ஈட்டா விடுப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார் சரவணன். இந்த கடிதம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதை சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்துள்ள எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K Palaniswami), அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை திமுக அரசு நிறுத்த வேண்டும் என என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ALSO READ: ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR