ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!

ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 28, 2021, 09:34 PM IST
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!

சென்னை: திடீர் உடல்நலக் குறைவால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுப்பினர். இதனையடுத்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, "முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை மேற்கொள்வார். ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. "இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமாக செய்யப்படும் ஒரு மருத்துவ பரிசோதனை. அதனால் அவர் இப்போது ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்" என்று நடிகரின் விளம்பரதாரர் ரியாஸ் கே அகமது பிடிஐயிடம் (PTI) தெரிவித்துள்ளார். 

70 வயதான நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke) விருது அறிவிக்கப்பட்டது. ஆனால கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருந்ததால், இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. 

இதனையடுத்து கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தேசிய விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அப்பொழுது நாடு முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த்துக்கு  நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (Vice President Venkaiah Naidu) "தாதா சாகேப் பால்கே" விருதை வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட பிறகு பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி எனக் கூறினார்.

தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதற்கு டெல்லி வந்த அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.

தனது மகள், மருமகன் பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அண்ணாத்த படத்தை பார்த்த ரஜினியின் பேரன் அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் HOOTE APP மூலமாக தனது சொந்த குரலில் பதிவி செய்ததை, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படமான "அண்ணாத்த" (Annaatthe) தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 4 அம தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தீபாவளி "தலைவர் தீபாவளி" என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News