வருத்தப்பட வேண்டாம், பயப்படவேண்டாம் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசுகையில் விஜயகாந்த் கூறியதாவது:- தேர்தல் தோல்விக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். பயப்பட வேண்டாம். நானும் பயப்படமாட்டேன். ஊடகங்களும், பத்திரிகைகளும் தான் விஜயகாந்த் பயந்துவிட்டார் என்று எழுதுகின்றன. தேர்தலில் தோற்றாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவேன் என்றார்.


இதைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்:- சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் சந்திக்கும் முதல் விழா இது. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையவும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்திலும் கூட்டணி ஏற்படுத்தினோம். கடந்த தேர்தலில் தேமுதிக எடுத்த முடிவு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதை நினைத்து எடுத்த முடிவு. தோல்வியைக் கண்டு அஞ்சவில்லை. தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வெற்றி பெற்றுள்ளனர். முள்பாதையில் பயணிப்பது சற்றுக் கடினம்தான். இறுதி வெற்றி நமக்குத்தான் என்றார்.


ஆண்டவன் நல்லவர்களுக்கு சோதனை தருவார். ஆனால் கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால் கைவிட்டு விடுவார். எனவே நாம் நமது பயணத்தில் உறுதியாக இருப்போம் என்றார்.