கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் உலகையை நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்த சுகாதாரப் பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முனைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் பல வெற்றியை எட்டி, மக்களுக்கு பயனளிக்கின்றன.


அந்த வகையில், இந்திய அரசின் டிஆர்டிஓ (DRDO) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் (Dr Reddy's Laboratories) நிறுவனம் இணைந்து '2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' ('2-deoxy-de-glucose') என்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. 


Also Read | கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு


'2டிஜி' என்று அறியப்படும் இந்த மருந்து, குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டது. அலோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டது. இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்போது நோயாளிகள், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 4 முதல் 5 நாட்களில் குணமடைவார்கள்.


தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்து மிகவும் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் திறன் படைத்தது 2DG. நீரிழிவு உட்பட வேறு இணை நோய்கள் உள்ள கொரோனா நோயாளிகளும், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 2DG மருந்தை பயன்படுத்தலாம்.


இந்த நிலையில், நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 3 கட்டங்களாக 2DG கொரோனா எதிர்ப்பு மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தின் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் (Chengalpattu Government Hospital) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Also Read | Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 18 முதல் 65 வயதுக்குள் என 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு கட்டமாக இந்த மருந்து கொடுத்து கண்காணிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி, அவர்களிடம் சம்மதத்துடனே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


2டிஜி மருந்து கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும், மிதமான, தீவிரமான பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளுக்கு 2டிஜி மருந்தை வழங்கலாம் என்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.. 


அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து '2டிஜி' மருந்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தனர்.


Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR