Actor Vijay Party TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  அந்த மனுவில் அடுத்த மாதம் செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் பாதுகாப்புக் கோரியும் காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது


கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி அக்கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் கட்சியின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்றது.


மிகப்பெரிய மாநாடு


அடுத்தக்கட்டமாக சுமார் 75 லட்சம் பேர் கூடும் வகையில் தமிழகத்தின் மையபகுதியில் மிகப்பெரிய மாநாடு நடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலத்தைக் காட்ட வேண்டும் என மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடந்து நடைபெற்று வந்தது.


பல இடங்களை தேர்வு செய்தவந்த நிலயில், இன்று இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த அனுமதி வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அமிக்கப்பட்டு உள்ளது. 


மேலும் படிக்க - தவெக கொடிக்கு எதிர்ப்பு... யானையை அகற்ற வலியுறுத்தல் - பகுஜன் சமாஜ் சொல்லும் காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ