சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் என கமல்ஹாசன் கருத்து..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. குற்றவாளிகள் மேல் IPC 302 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து புனலாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.


சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கைCBI-க்கு மாற்றிய தமிழக அரசின் முடிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... "சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!


குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி." என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 



READ | 230 சிறப்பு ரயில்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு சேவையை திறந்தது ரயில்வே...


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்திய பென்னிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் மரணித்ததாக பலர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.


சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்ற தமிழக அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த நிலையில், அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.