ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்திய ரயில்வே தற்போது இயங்கும் 230 சிறப்பு ரயில்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு சேவையைத் திறந்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மத்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி சிறப்பு ரயில்களில் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...
இதுதொடர்பான அறிவிப்பில், "30/06/2020 முதல் தொடங்கும் அனைத்து சிறப்பு ரயில்களிலும் (0 எண்களுடன் தொடங்கி) 29/06/2020 முதல் தட்கல் முன்பதிவு தொடங்கும்" என்று புரோ சிவாஜி சுதார் ட்வீட் செய்துள்ளார்.
Tatkal Booking will commence from 29/06/2020 in all Special Trains (starting with 0 numbers) for journey commencing from 30/06/2020 onwards.@Central_Railway
— Shivaji M Sutar (@ShivajiIRTS) June 28, 2020
தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் பயணிக்க விரும்பும் பயணிகள் ஏசி வகுப்பிற்கான பயணத்திற்கு ஒரு நாள் முன்பும், அதே நாள் காலை 11 மணிக்குப் பிறகு ஸ்லீப்பர் வகுப்பிற்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும், தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் விலை சாதாரண டிக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது விலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை IRCTC வலைத்தளம் மற்றும் பயன்பாடு மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே தற்போது நாடு முழுவதும் 230 சிறப்பு ரயில்களை இயக்குகிறது, ஜூலை 1-க்குப் பிறகு இயங்கும் ரயில்களும் இவை மட்டும் தான். முந்தைய அறிவிப்பில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரை திட்டமிடப்பட்ட அனைத்து வழக்கமான ரயில்களையும் இந்திய ரயில்வே ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?
அதேப்போல் முந்தைய அறிவிப்பில், இந்திய ரயில்வே முன்பதிவு காலத்தை 30 நாட்களில் இருந்து 120 நாட்களுக்கு நீட்டித்தது, இதன்மூலம் பயணிகளுக்கு பயணங்களைத் திட்டமிட அதிக நேரம் கொடுத்தது. முன்கூட்டியே முன்பதிவு காலத்தை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 30 சிறப்பு ராஜதானி மற்றும் 200 சிறப்பு அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான இட ஒதுக்கீடு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.