கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன்!
கோவையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் ரத்தினபுரி டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர், அப்போது போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன.
இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் மாணவர், மேலும் போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரிகாலன், (49) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை - வலி நிவாரண மாத்திரை - நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கியதும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறையில் பயன்படுத்தியும், போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ