தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி தமிழகம் மற்றும் சென்னையில் நாளை முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
கடந்த சில நாட்களாக கோடைக்கால தொடக்க அறிகுறியாக தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெயில் கொடுமை நாளை முதல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுவையில் குறைந்த அளவு வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.