மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டூபிளசிஸ், பாதியிலேயே வெளியேற நினைத்ததைக் வெளிப்படையாக  தெரிவித்துள்ளார். இப்போட்டியில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டூபிளசிஸ் அதிரடி


இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார்.



மேலும் படிக்க | ரோகித் அவுட் சர்ச்சை: மூன்றாவது நடுவரை விளாசும் மும்பை ரசிகர்கள்


ஓய்வுபெற நினைத்த டூபிளசிஸ்


பேட்டிங்கின்போது பாதியிலேயே வெளியேற நினைத்துள்ளார் டூபிளசிஸ். போட்டிக்குப் பிறகு பேசும்போது, " ஒரு கட்டத்தில் நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அதனால், வேண்டுமென்றே அவுட்டாகலாமா? என்று கூட யோசித்தேன். மேலும், தானாகவே ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறலாமா? என்றும் யோசித்தேன். ஏனென்றால், நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் களத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 



தினேஷ் கார்த்திக் விளாசல்


இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கேப்டன் டூபிளசிஸ் எதிர்பார்த்ததுபோலவே அதிரடியாக விளையாடினார். அவரின் அதிரடியால் பெங்களூரு அணி சவாலான ஸ்கோரை எட்டியது. இப்போட்டியில், பெங்களுரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டானார். இந்த தொடரில் மட்டும் 3வது முறையாக கோல் டக் அவுட்டாகியுள்ளார். 


மேலும் படிக்க | பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR