பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்

டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் தோனி பேட்டை கடிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 10, 2022, 11:34 AM IST
  • பேட்டைக் கடிக்கும் சென்னை கேப்டன்
  • தோனியின் புகைப்பபடம் வைரல்
  • அமித் மிஸ்ரா டிவிட்டரில் கிண்டல்
பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்  title=

டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனியின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. வழக்கமாக சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நிலையில், இம்முறை வித்தியாசமான புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | இன்னும் சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறதா?

குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ராவும் இந்த புகைப்படம் குறித்து கமெண்ட் அடித்துள்ளார். டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் தோனி, பேட்டைக் கடிக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அமித் மிஸ்ராவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, தோனி பேட் சாப்பிடுவதற்கு பின்னணி காரணத்தை கூறியுள்ளார். அதில், தோனி பேட்டில் இருக்கும் டேப்பை அகற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எப்போதும் பேட் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்

அமித் மிஸ்ரா கூறியதுபோலவே உண்மையில் பேட்டில் இருக்கும் டேப்பை தான் தோனி அகற்றிக் கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை, ஐபிஎல் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டதட்ட மங்கிவிட்ட சூழலில், கடந்த 3 போட்டிகளில் அதிரடியாக ஃபார்முக்கு திரும்பியது. அடுதடுத்த போட்டிகளில் சன்ரைசர்ஸ், பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு இருக்கும் நூலிழை வாய்ப்பு இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 


தோனியும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்த 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்கும்பட்சத்தில் சென்னை அணி சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 

மேலும் படிக்க | காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News