ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், DSP மதியழகன் தலைமையில் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உதவிபொறியாளரான செல்வகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


ALSO READ | செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!


இந்த நிலையில் இன்று லாலாபேட்டை கிராமத்தில் உள்ள செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் DSP மதியழகன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். 


தொடர்ந்து 15 மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டிலிருந்து கணக்கில் வராத 10,73,520 வரைவோலையாகவும் (Demand Draft), 23,32,770 ரூபாய் ரொக்கமாகவும் (Cash), 193.75 சவரன் தங்க நகைகள் (Gold), 2.17 கிலோ வெள்ளி (Silver) மற்றும் வேலூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை காட்பாடி பல கோடி மதிப்பிலான நில ஆவணங்களை (Land Documents) லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். மேலும் பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | PUBG GAME: பப்ஜி மதனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


Telegram Link: https://t.me/ZeeNewsTamil