ஆசிய விளையாட்டு 2018 டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசை அறிவித்தார் EPS....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து 7 நாளாக 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.  இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.


இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார். இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் திரு.பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து அனுப்பிய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.