பழனிச்சாமியை, விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்; அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில், உரிய இடத்தில் தெரிவிப்பேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.  திருச்சியில், அ.தி.முக.,தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ஆலோசனைக் கூட்டம் டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மண்டபத்தின் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற. பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பன்னீர்செல்வம் கூறியதாவது, நாலு பேரை வைத்துக் கொண்டு படாதபாடு பட்டதாக கூறிய பழனிச்சாமியிடம் தான், அவர்கள் யார் என்று கேட்க வேண்டும். முதல்வரானாலும், பொதுச்செயலாளரானாலும் எந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவர்.  லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்


திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்த போது, அவரை வாழ்த்தி துண்டு சீட்டு கொடுத்தேன். அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான பிரச்னையை பேசி வருகிறேன். அவர்கள் மனம் வெதும்பி உள்ளனர். சுயநலம் காரணமாகத் தான், பழனிச்சாமி அவர்கள் ஒன்று சேரக் கூடாது, என்று சொல்கிறார். 50 ஆண்டுகளாக, தியாக வாழ்க்கை மேற்கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிப்படி இயக்கத்தை நடத்தினர். அதில் கை வைத்துள்ளார் பழனிச்சாமி.  அவருடன் இருப்பவர்கள், ‘நாங்கள் என்ன சொன்னாலும், பழனிச்சாமி கேட்க மறுக்கிறார்,’ என்று மன வேதனையோடு பேசுகின்றனர்.


தேர்தலுக்கு முன், ‘நான் முதல்வராக வந்த பின், 3 மாதங்களில், கொடநாடு கொள்ளை வழக்கை விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டனை வழங்குவேன்,’ என்றார் ஸ்டாலின்.  அவரும், பழனிச்சாமியும் கூட்டணி வைத்திருப்பதாக நான் சொல்லவில்லை சாமி, மக்கள் சொல்கின்றனர். ஏன் அந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர், என்று மக்கள் கேட்பதை, நானும் கேட்கிறேன். மோடி தான் பிரதமராக வேண்டும், என்பது மக்கள் கருத்தாக உள்ளது. இண்டியா கூட்டணி என்பது, ஆண்டிகள் கூடி கட்டிய மடம். பழனிச்சாமியை, விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்; அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில், உரிய இடத்தில் தெரிவிப்பேன்.


வரும் லோக்சபா தேர்தலில், இறைவன் தந்த சின்னத்தில் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க., சின்னம் தொடர்பான விவகாரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் 19ம் தேதி, பொதுக்குழு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் விசாரிக்கப்படும், என்று தெரிகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில், நீதிக்கு தலை வணங்குவோம். நியாயமான இலக்கை அடைவதற்காக, சோர்வு இல்லாமல், அடிக்க அடிக்க எழும் பந்தை போல் எழுவோம். எங்களை யார் பின்னுக்கு தள்ளினாலும், முன்னேறிக் கொண்டு தான் இருப்போம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ