அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை முற்றியுள்ளது. ஒற்றைத் தலைமை தேவையில்லை என கூறி ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைக்க முயன்றாலும்; எடப்பாடி பழனிசாமியின் மௌனமும், அவரது ஆதரவாளர்கள், ‘ஒற்றைத் தலைமையே’, ‘கழக பொதுச்செயலாளரே’ என கட் அவுட்கள் வைப்பதும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு குடைச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலைமை இப்படி இருக்க ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அதேபோல் தனது ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானத்தின் இறுதி வடிவமைப்பு குறித்த கூட்டத்திலும் ஓபிஎஸ் கலந்துகொண்டார். 



ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வந்ததுபோல் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இபிஎஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் ஆப்செண்ட் ஆனார். 


எனவே, ஒற்றைத் தலைமை இப்போதைக்கு வேண்டாம் என ஓபிஎஸ் கூறியும் ஏன் இருவரும் தனித்தனியாக ஆலோசனை செய்கின்றனர், தீர்மான இறுதி வடிவமைப்பு கூட்டத்தில் எதற்காக இபிஎஸ் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்தது.


இந்நிலையில், 23ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தனக்கு சாதகமாக கொண்டு செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக அவரும், அவர் தரப்பும் மாவட்ட செயலாளர்களை கவர் செய்யும் வேலையில் இத்தனை நாள் தீவிரமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



அதுமட்டுமின்றி, “ முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரும், இபிஎஸ்ஸின் மனசாட்சியாக பார்க்கப்படும் ஒருவரும் கொங்கு மண்டலத்திலிருந்து இந்த ஆபரேஷனை தொடங்கினர். இதுவரை பல மாவட்ட செயலாளர்களுக்கு ‘பூஸ்ட்டர் பாக்ஸ்’ சென்றடைந்துவிட்டது. சில நாள்களில் இன்னும் சில மா.செக்களுக்கு ‘பூஸ்ட்டர் பாக்ஸ்’ சென்றடைந்துவிடும். 


மேலும் படிக்க | அதிமுகவில் ஒற்றைத் தலைமை - கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு


எனவே எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவையான அளவு இப்போதே உருவாகிவிட்டது.  அந்த தைரியத்தில்தான் ஓபிஎஸ் இறங்கிவந்தும் இபிஎஸ் இறங்கிவர மறுக்கிறார்; கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருக்கிறார்” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.


இதற்கிடையே இபிஎஸ்ஸின் இந்த மூவை எதிர்பார்க்காத ஓபிஎஸ்ஸூம் தன் பங்குக்கு பூஸ்டர் பாக்ஸை டெலிவிரி செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.



எது எப்படியோ ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கூவத்தூரில் அதிமுகவின் புதிய தலையெழுத்து எப்படி எழுதப்பட்டதோ அதே பாணியைத்தான் இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தற்போது கையில் எடுத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன் - அதிரடி காட்டும் ஜெயக்குமார்... அடுத்தது என்ன?


இதனை கூவத்தூர் 2.0 எனவும் கொள்ளலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில், கூவத்தூர் 2.0விலாவது ஓபிஎஸ் ஸ்கோர் செய்வாரா இல்லை இபிஎஸ்ஸே ஸ்கோர் செய்வாரா என்பதற்கு காலத்திடம்தான் விடை இருக்கிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR