மதுரையில் நடந்த மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இல்லாமல் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும்" என்று கூறினார்.மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கின்றன. அவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் உடனடியாக அல்லது எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளாக மாறுமா? என்றால் அது கேள்விக்குறியே என்கிறது அரசியல் வட்டாரம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


முதலில் பாஜகவோடு அதிமுக கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு முழு காரணம் சிறுபான்மையினர் வாக்குகள். அவர்களின் வாக்குகள் கிடைத்திருந்தால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், பாஜக ஆதரவு மற்றும் அக்கட்சியுடனான கூட்டணியின் காரணமாக இந்த வாக்குகளை இழந்தது அக்கட்சி. மேலும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததால், அதிமுக பக்கம் இருந்த சிறுபான்மை மக்கள் அக்கட்சி மீதான நம்ப தன்மையை இழந்துவிட்டனர். இதனை சரிகட்டவே அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்டிபிஐ கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறுபான்மையினர் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. 


இத்தகைய முடிவு, அரசியல் களத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக என்ற மனப்பான்மையை உருவாக்க இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே வாக்குகளாக எதிரொலிக்கும் என்று கணக்கு போட்டால், அது அதிமுகவுக்கு மற்றொரு அரசியல் படுதோல்வியையே பரிசாக கொடுக்கும். ஏனென்றால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது வாக்கு வங்கியை குறிவைத்து தான் என்பதை அவர்களும் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் அதிமுக இதே நிலைப்பாட்டில் இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குகளாக மாற வாய்ப்பு இருக்கிறது. 


இருப்பினும் பாஜக இதனை எப்படி பார்க்கும், இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தகைய நெருக்கடிகளையெல்லாம் கொடுக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கனவே அவர் மீது டெண்டர் முறைகேடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக அந்த வழக்குகள் விரைவுப்படுத்தினால், எடப்பாடி பழனிசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக இருக்கிறது. மேலும், மோடியை எதிர்த்து அரசியல் செய்யும் அளவுக்கான அரசியல் திராணி எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்பதால், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது பாசாங்கு தவிர வேறொன்றும் இல்லை என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களுக்கு தேர்தல் லாபமும் கிட்டாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க | சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு... காத்திருக்கும் சம்பவம் - மிக்ஜாம் தாக்கம் இருக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ