தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (Satyapratha Saku). 


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் (Election officials) ஆணையர் சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இவர்கள் தான். தேர்தலை நடத்துவது தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கவனித்து தீர்ப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த தேர்தல் அதிகாரிகள்தான் கவனிப்பார்கள்.


ALSO READ | அ.தி.மு.க. என்றால் அண்ணா தி.மு.க. அல்ல அடிமை தி.மு.க. மோடி: உதயநிதி ஸ்டாலின்!


தேர்தல் குறித்த தகவல் வந்தது முதல் வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுக்கும் வரை இவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார். தேர்தல் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR