ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான யானைகள் வளர்ப்பு   முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில்  அசோக் என்ற 12 வயது யானையின் பராமரிப்பு பணியில்  கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) மற்றும் முருகன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல அசோக் என்ற யானைக்கு ஆறுமுகம் உணவு அளித்து விட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றபோது  திடீரென அந்த யானை முருகனை தாக்கியது.



ALSO READ | தண்ணீரில் மிதந்த உடலை மீட்க முயற்சித்தபோது உயிருடன் எழுந்து வந்த அதிசயம்


அதை பார்த்த ஆறுமுகம் அவரை காப்பாற்ற சென்ற போது அவரையும் தாக்கியது. இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில், வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR