தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு அமலில் இருந்த 61 நாட்கள் மீன் பிடி தடைகாலம் நிறைவடைந்தது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி மீன்களின் இனபெருக்க காலம் என வரையறுக்கபட்ட 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன் பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. 


இதனால், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன் பிடி வலைகள்  உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். 


இந்நிலையில் மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு அமலில் இருந்த 61 நாட்கள் மீன் பிடி தடைகாலம் நேற்றோடு நிறைவடைந்தது. இதனைதொடர்ந்து, சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீண்டும் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 


தமிழகத்தில் காற்றழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது!