வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.  கடந்த 2001 - 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மகன்கள் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


 


 


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி செல்வம் அடுத்த விசாரணை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.  இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ள விபரம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது, இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு செஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அவருக்கு ஆபரேஷன் முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.


அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சர்களுக்கு மாற்றிய தமிழக அரசு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவித்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி,  அவரது மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்ததும், கைதுக்கான காரணங்களை தெரிவிக்காததும் சட்டவிரோதம் என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார்.  கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை என அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படை உரிமையை மீறும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனவும் மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.


மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீயிமன்ற காவலில் உள்ள காலமாக சேர்க்க கூடாது என அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரியின் அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.  இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள்,  அமலாக்கத் துறை பதில் வாதத்துக்காக, வழக்கின் விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


மேலும் படிக்க | என் மீது வழக்கு போட திமுக அரசு திட்டம் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!


 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ