சென்னை: கடந்த இரு வாரங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அடுத்தடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டது. முதலாவதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்ததாக தமிழக மின்வாரியத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி மற்றும் கனரக தளவாடங்கள் வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவை காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இறந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று கேரளாவில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 300 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் 12 இடங்களில் சோதனையானது நடைபெற்றது.


மேலும் படிக்க - முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி: இன்றும்... என்றும் இல்லை... இபிஎஸ் அதிரடி முடிவு!


இந்நிலையில் இன்று, தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை தி.நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு சோதனை நடத்தி வருகிறது. இதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜோதி குமார் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - கூட்டணி முறிவு: தேசிய தலைமை பேசும் - அமைதி காக்கும் அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ