சென்னையில் துணை ராணுவத்தினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பாதுகாப்புக்கு போலீஸ் வேண்டாம்!
ED Raid In Chenna Latest : ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் ST கொரியர் நிறுவனத்தில் சோதனை!
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திநகர், திருவான்மியூர், மயிலாப்பூர், முகப்பேர், கொளத்தூர், அண்ணா நகர், கொளத்தூர், உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போகிறார் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி. திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளரான நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவரது நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை அவ்வப்போது நடைபெற்று வருகிறது, அதிலும், இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி உள்பட சில திமுக பிரமுகர்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என்று நினைத்து, துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.
மேலும் படிக்க | குஜராத் துறைமுகத்திலிருந்து தான் போதைப் பொருட்கள் வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு
இந்த நிலையில் திடீர் என இன்று காலை சென்னையில் உள்ள 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாகவும் அவர்களின் பாதுகாப்புக்காக துணை இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஒரு முக்கிய தகவலின் அடிப்படையில், இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை செய்யப்படும் இடங்கள் மற்றும் சோதனைக்கான காரணங்கள் குறித்து இன்று மாலை தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தி.நகரில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரார் நரேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக கடந்த வாரம் பல்வேறு ஒப்பந்தரார்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | “நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ