தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார் அகரம் பகுதியில் நடைபெற்றது. மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில் கூறியதாவது :
இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சோதனை. இதனை பிறந்தநாள் விழா என்பதை விட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமாக உழைத்து கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியினால் தான் விலைவாசி உயர்ந்து விட்டது. சத்தியம் தவறாத உத்தமன் போலவே மோடி நடிக்கிறார். ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது தான் ஜிஎஸ்டியில கையெழுத்து போட்டார். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டியாக 100 ரூபாய் வசூக்கிறார்கள். ஆனால் நமக்கு திருப்பி கொடுப்பது 29 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள்.
புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பட்டேல் சிலை 3 ஆயிரம் கோடி, மோடி ஸ்டேடியம் 800 கோடி, பாராளுமன்ற கட்டிடம் கட்ட 900 கோடி, பசு பாதுகாப்பு 750 கோடி மாட்டு சாணம் கோமியம் ஆராய்ச்சிக்கு 500 கோடி, சமஸ்கிருதம் வளர்ச்சி 650 கோடி. தமிழ் பழமையான மொழி என்று பிரதமர் மோடி சொல்கிறாரே தமிழை ஒன்றிய அரசின் அலுவல் மொழி ஆக்குவீர்களா. திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறார். ஆனால் தமிழ் நாட்டுக்கு வந்தால் தமிழ் தான் பிடிக்கும் என்பார். வெள்ளத்தின் போது வராத பிரதமர் தற்போது அடிக்கடி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் போதை பொருள் புழக்கம் அதிகம் இருந்தது. குட்கா, கஞ்சா, கோகைன் போன்ற போதைப் பொருட்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் வழியாக தான் இந்தியா முழுவதும் போதை பொருள் வருகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் திட்டங்கள் கொண்டு வர இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மேலும் படிக்க | CAA சட்டத்திற்கு அதிமுக ஏன் ஆதரவு கொடுத்தது? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ