CHENNAI: தற்போது அதிமுக முகாமில் ஒருவிதமான அமைதி நிலவுகிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அடுத்த "அதிமுக முதல்வர்" வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக அறிய முடிந்தது. அதிமுகவில் உருவாக்கியுள்ள மோதலுக்கு இடையே, அதிமுக  எம்.எல்.ஏக்கள் (AIADMK MLAs) அனைவரும் வரும்  6 ஆம் தேதி சென்னைக்கு வர தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


யார் அடுத்த முதல்வர் என்பதில் OPS மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் EPS மகன் ஜெயபிரதீப் டெல்லியில் உள்ள முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இது சந்திபு EPS தரப்புக்கு ஆதரவை அதிகரித்துள்ளது எனத்தகவல்கள் கூறுகிறது.


ALSO READ |  மீண்டும் அதிமுக ஆட்சி? மெகா கருத்துக்கணிப்பை நடத்திய தன்னார்வ அமைப்புகள்!!


28 செப்டம்பர் அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் OPS தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒருசில அமைச்சர்களை தவிர, மற்ற எல்லோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமைச்சர் தங்கமணி கடினமான சவால்களுக்கு மத்தியிலும் கட்சி நான்கு ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதை உறுதிசெய்தது இ.பி.எஸ் தான் என்று கூறினார். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, அவருக்கு உரிய மதிப்பை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மற்ற அமைச்சர்களான கே.ஏ.செங்கொட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி. தம்பிபுரை ஆகியோரும் EPS-க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். 


இதைத் தொடர்ந்து, கோபமடைந்த OPS, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி விரல்களைக் காட்டி, "அம்மா (Amma) என்னை முதல்வராக்கினார். ஆனால் சசிகலா (Sasikala) தான் உங்களை முதல்வராக்கினார். கட்சியும், ஆட்சியும் சசிகலா குடும்பத்திடம் சிக்கி இருந்தது. சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் கட்சி சிக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் எதிர்த்து வாக்களித்தேன். அந்த குடும்பத்தின் பிடியில் கட்சி இல்லை என்று தெரிந்த பின்பு, உங்களுடன் இணைந்து கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்றினேன். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் என திமுக தீர்மானம் கொண்டுவந்த போது, என்னுடன் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து, ஆட்சியை காப்பாற்றினோம். இன்றும் ஆட்சி தொடர்ந்து நடைபெறுவற்கு முக்கியக் காரணம் நான் தான்" என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.


ALSO READ |  தர்மயுத்தம் பார்ட்-2 தொடங்குகிறதா... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் சிக்கல்...?


முதல்வர் EPS பேசுகையில், "நான் மட்டுமல்ல. நீங்கள் குறிப்பிட்ட நபர் (சசிகலா) தான் உங்களை மூன்றாவது முறையாக முதல்வராக்கினார். மறக்க வேண்டாம். நீங்கள் (OPS) சொல்கிறீர்கள் "இது அம்மாவின் அரசு அம்மாவின் அரசு" என்று, ஆனால் நீங்கள் தான் இந்த அம்மாவின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தீர்கள். உண்மையில் நான் தான் உங்கள் எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றினேன். எந்த காலத்திலும், எந்த பதவியையும் நானாகவே போய் கேட்டு பெறவில்லை. தனது கடுமையான உழைப்பினால் ஒவ்வொரு பதவியாக பெற்று, இங்கு வந்துள்ளேன். பல தடைகளுக்கு மத்தியில் நான் இந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறேன். இந்த அரசாங்கம் மற்றும் கட்சி மீது சுமத்தப்பட்ட முழு அழுத்தத்தையும் நான் சுமக்கிறேன். இதுதான் எனக்கு கிடைக்கும் மரியாதையா?" என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 


இப்படி காரசாரமான வாதத்திற்கு மத்தியில் கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம், ஒரு மூடிய அறைக்குள் வரும் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப்படும் என அறிவித்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டம் காரணமாக சோர்வு அடைந்த அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். 


அக்டோபர் 7 ஆம் தேதி என்ன நடக்கும்?


எடப்பாடி பழனிசாமியின் பெயரை முதல்வர் வேட்பாளராக 7 ஆம் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் இபிஎஸ் முகாம் உறுதியாக உள்ளது. டெல்லியும் இபிஎஸ் தரப்புக்கு பக்கம் உறுதியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் OPS-யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அவர் EPS-க்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? மீண்டும் ஒரு தர்ம யுதம் 2.0 (Dharma Yudham 2.0) மேற்கொள்வாரா?


ALSO READ |  ADMK செயற்குழுவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!


எங்களை பொறுத்த வரை அப்படி எதுவும் OPS நிச்சயமாக செய்யமாட்டார். ஏனென்றால், தற்போது அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை OPS தரப்பு புரிந்து கொண்டுள்ளது. தனது சொந்த சமூகத்திலிருந்து அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லை. சசிகலாவுக்கு எதிராக அவர் செய்ததை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களைப் பொருத்தவரை, OPS துரோகம் செய்துவிட்டார் என்ற மனநிலையில் உள்ளனர். மக்களின் எண்ணத்தை சரிசெய்ய OPS தரப்பு தவறிவிட்டது. தற்போது தனது இரண்டாவது மகனுக்கு எம்.எல்.ஏ டிக்கெட் கூட கோரும் நிலையில் அவர் இல்லை என்பதே தற்போதைய நிலையாகும்.


"முதல்வர் நாற்காலி நாடகம்" வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR