ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட முள்ளம் பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்த பள்ளியின் கழிவறையை மாணவர்களை கொண்டே சுத்தம் செய்யும் கொடுமை நடைபெற்று வருவது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைகளை தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்டாலினை கேள்விகேட்ட இபிஎஸ்: பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!


இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தினமும் பள்ளிக்கு முதலாவதாக வரக்கூடிய மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூறியிருப்பதாக அப்பள்ளி சிறுவர்கள் கூறுகின்றனர். ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் மாணவர்களின் கழிவறை உள்ளிட்டவற்றை சிறுவர்களை கொண்டே தினமும் சுத்தம் செய்வதாக மாணவ மாணவிகள் வருத்தத்தோடு பதிவு செய்தனர். அதுவும் காலில் செருப்பு கூட இல்லாமல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



மேலும் படிக்க | பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி


அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதனை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் கழிவறையை சுத்தம் செய்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR