ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மீது புகார் கடிதம் ஒன்றை மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தான் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய பொழுது அனைவரது முன்னிலையிலும் தன்னை திட்டியதாகவும் தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னிடம் பாகுபாடாக நடந்து கொண்டதாகவும் கோப்புகளில் கையெழுத்திட தாமதம் செய்ததாகவும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகும் குறிப்பிட்டு இருக்கிறார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியே சாதிய ரீதியான புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ககன் தீப்சிங் பேடி:


மூத்த ஐஏஎஸ் அதிகாரியாகவும் தற்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும் இருப்பவர், ககன் தீப்சிங் பேடி. இவர் தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் புகாரளித்துள்ளார்.  ஈரோடு கூடுதல் ஆட்சியராக பொருப்பில் உள்ள மணிஷ் நரனவாரே என்ற இளம் ஐஏஎஸ் அதிகாரிதான் அந்த புகாரை கொடுத்துள்ளார். இது குறித்து, அவர் தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகார கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். மனிஷ் கொடுத்துள்ள இந்த புகார், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்


புகாரில் கூறியுள்ள விஷயங்கள் என்ன?


மனிஷ் அளித்துள்ள புகாரில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தற்போதைய சுகாதாரத்துறை அதிகாரி ககன்தீப் சிங் பேடி, தன்னை சாதிய ரீதியாக துன்புருத்தியதாகவும் இதனால் தான் மன உளைச்சலுக்கு உண்டானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த முழுவிவரம் பின்வருமாறு: 


”“மனிஷ் நானவேர் ஆகிய நான், சென்னையின் சுகாதரத்துறை அதிகாரியாக உள்ள ககன்தீப் சிங் பேடியினால் பாதிக்கப்பட்டது குறித்து எழுதும் புகார் கடிதம் இது. நான் வேலையில் இருந்தபோது, ககன் தீப் சிங் என்னை மிகவும் மன உளைச்சளுக்கு உள்ளாக்கினார். இவை அனைத்தையும் நான் பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பது தெரிந்தே அவர் இதையெல்லாம் செய்தார்” என்று மனிஷ் தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.  


ககன்தீப் சிங் குறித்து மனிஷ் குற்றம் சாட்டியுள்ள விஷயங்கள்:


மனிஷ், தனது கடிதத்தில் எப்படியெல்லாம் ககன்தீப் சிங் தன்னை துன்பப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். 


-ஒரு முறை, ஒரு வழக்கு சம்பந்தமாக இரவு 8:30 மணிக்கு மேல் இடுகாடு (உடல்களை எரிக்கும் இடம்) மூடியிருக்கும் என தெரிந்தும் அந்த நேரத்தில்தான் என்னை அங்கே ஆய்வுக்கு அனுப்பினார். 


-ஒரு முறை 40 கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் தேவையில்லாத காரணங்களுக்காக என்னை அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தினார்.


-எனக்கும் டாக்டர் இராதகிருஷ்ணன் ஐ.ஏ,எஸ் அவர்களுக்கும் இடையே பல முறை விரோதம் உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார். 


-எனது சாதி குறித்தும் புத்த மதத்தை பின்பற்றும் நான் ஏன் உஜ்ஜைனி கோவிலுக்கு செல்கிறேன் குறித்தும் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 


-என் சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்திட தாமதிப்பார். தினமும் அந்த கையெழுத்திற்காக ஒரு நாளில் பல மணி நேரம் காக்க வைப்பார். பின்னர், “தம்பி இப்போ லேட் ஆயிடுச்சு. நாளைக்கு வா” என்பார். மறுநாள் போனாலும் இதே பதில்தான்.


இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள ஈரோடு துணை கலெக்டர் மணிஷ், இவையணைத்தும் 14/06/2021 முதல் 13/06/2022 வரை ஆன நாட்களில் நடந்தது என குறிப்பிட்டுள்ளார். 


“மன உளைச்சலுக்கு ஆள் ஆனேன்..”


ககன்தீப் சிங் பேடி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள மனிஷ், இதனால் தான் மிகுந்த மன உளைச்ச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இது போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதாகவும் அவர் தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து ககன் தீப் சிங்கிடம் கூறியும் அவர் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | விளைநிலங்களில் சிப்காட் கூடாது: விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ