செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில், ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தில், செங்கல்பட்டு தலைமை தபால் அலுவலகம், 45 துணை தபால் நிலையம், 196 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில், ஆதார் சிறப்பு முகாம் நடத்த கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டனர்.


இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், ஆதார் சிறப்பு முகாம், நேற்று துவங்கப்பட்டது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் வந்து, ஆதார் திருத்தம், புதிய அட்டைக்கு புகைப்படம் எடுத்தனர். இதேபோல், மதுராந்தகம் துணை தபால் நிலையத்திலும் நடைபெற்றது. இம்முகாம், வரும் 24-ஆம் தேதி வரை, அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, ஆதார் திருத்தம், சேர்த்தல் ஆகியவை செய்து கொள்ளுமாறு தபால் துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்கம் கொண்ட ஆதார்  எண் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் செல்லும் என கடந்த வரும் 2018 செப்டம்பர்  மாதத்தில் உத்தரவிட்டது. எனினும், வங்கிக்கணக்குகள், செல்போன் இணைப்பு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிரப்பித்தனர்.


இந்நிலையில் ஆதார் எண், மற்றும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் நாட்டு மக்களின் முக்கியமான அடையாளமாக உருவாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் தவராக இருக்கும் பட்சத்தில் அரசின் சலுகைகள் பலவற்றை இழக்க நேரும் அவலங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு முகாமினை தபால் துறை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.