சசிகலா சென்னை வரும் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!
தமிழகத்திற்கு சசிகலா வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா 7-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு கர்நாடகாவில் இருந்து தமிழம் வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சர்ச் ஆனா சசிகலா பெங்களுருவில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா (Sasikala) விடுதலை பெற்று பெங்களூரு (Bengaluru) அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா (Corona) தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ALSO READ | சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!
சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பவுள்ள சசிகலாவின் விடுதலை பல விடுகதைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அவர் முதல்வராய் இருந்த நேரத்திலேயே கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார். பல ஆட்சி மற்றும் கட்சி தொடர்பான முடிவுகளை ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவரும் எடுத்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக தொண்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சசிகலா கட்சியை கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால், அதன் பின் அனைத்தும் அவருக்கு எதிராக மாறின. கட்சியில் அவருக்கு எதிராக குரல்கள் எழும்பின. அதே வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தது.
சிறை சென்ற சசிகலா, தமிழக அரசியல் களத்திலிருந்து ஒதுங்கிப்போனார். அவர் சிறையில் இருந்தாலும், அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் இணைந்து உருவாக்கிய அமமுக கட்சி, அவ்வப்போது தமிழக அரசியலில் தங்களது இருப்பைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது.
சசிகலாவின் விடுதலைக்கான காலம் நெருங்கவே தமிழக அரசியலிலும், பல கட்சிகளிலும் குழப்பங்களும், சந்தேகங்களும், கருத்து வேறுபாடுகளும் உருவாகத் தொடங்கின. ஒருவரது விடுதலை இத்தனை விடுகதைகளை போடுகிறதென்றால், அவரது ஆளுமையின் தாக்கம் பெரிதாகவே உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சசிகலா சிறையில் இருந்த காலத்தில், அதிமுக (AIADMK) தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் தனித்துவமான நற்பெயரையும் சம்பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
இதற்கிடையில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டுவது, கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சசிகலா பிப்ரவரி 7-ம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாக டிடிவி தினகரன் முன்பு அறிவித்திருந்தார். இதனிடையே சசிகலா பிப்ரவரி 7-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகத் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தெரிவித்துள்ளார்.
ALSO READ | சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR