முன்னாள் ராணுவ வீரர்கள் செய்யும் செயலா இது? தட்டிக்கேட்ட வனக்காவலருக்கு கத்திக்குத்து!
அருவியில் பெண்களிடம் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் தங்களது நண்பர்களுடன் அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியைச் சேர்ந்த பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி, உள்ளிட்ட மூவரும் முன்னாள் ராணுவத்தினர். இவர்களது நண்பரான ஏழுமலையை சேர்ந்த சரவணன், திருப்பரங்குன்றம் வடிவேலு உள்ளிட்ட 5 பேரும் மது அருந்துவிட்டு கும்பக்கரை அருவியில் குளிக்க வந்துள்ளனர்.
அப்போது அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் 5 பேரும் தகாத முறையில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போது போதை ஆசாமி ஒருவர் அவர்கள் வந்த காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வனத்துறையினரை தாக்க முற்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்
இதனையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் சூழ்ந்துகொண்டு அவர்களை மடக்கிப் பிடித்து கத்தியை பிடுங்கி அசம்பாவிதங்களை தவிர்த்து உள்ளனர்.
இது தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் இருந்தவர்களை பிடித்து உட்கார வைத்தனர். அப்போது அதில் ஒரு போதை ஆசாமி வந்திருந்த காவலர்களையும், வனத்துறையினரையும், தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் காயமடைந்த போதை ஆசாமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்து, அங்கேயே இரண்டு மணி நேரமாக போதை ஆசாமிகள் சுற்றுலா பயணிகளையும் அங்கு சுற்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் தொடர் போராட்டத்திற்கு பிறகு கூடுதல் காவலர்களின் உதவியுடன் அடிப்பட்ட போதை ஆசாமியை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு மீதமுள்ள 4 பேரை காவல் நிலையம் கூட்டிச்சென்றனர்.
மேலும் அவர்கள் வனக்காவலரை தாக்க பயன்படுத்திய கத்தியையும் பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த மது போதை ஆசாமிகளால் கும்பக்கரை அருவியில் மூன்று மணி நேரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் படிக்க | சர்ப்ரைஸ் கொடுத்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்வூட்டிய திமிங்கல வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR