Snake Video: முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள்

Viral Video of Snakes: பாம்புகள் முட்டையை அடை காக்குமா? என்பதை விட ஏன் முட்டைகளைப் பார்த்து சீறுகின்றன என்று கேட்கும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்க பாம்பு பாஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2022, 03:02 PM IST
  • பாம்புகள் முட்டையை அடை காக்குமா?
  • முட்டைகளைப் பார்த்து சீறும் பாம்புகள்
  • நெட்டிசன்கள் கேள்விக்கணைகளுக்கு பதில் உண்டா
Snake Video: முட்டையைப் பார்த்தா கோபம் வரலாமா: சீறும் சர்ப்பங்கள் title=

பாம்பு என்றால் பார்த்தாலே பத்தடி தொலைவில் ஓடுபவர்கள் கூட இணையத்தில் வெளியாகும் பாம்பு வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர். காரணம் விசித்திரமானது இல்லை மிகவும் எளிதானது.

நேரில் பார்த்தால் சீறும் பாம்பு தானே பயத்தை ஏற்படுத்தும்? வீடியோவில் அதன் செய்கைகளையும், தாக்குதலையும் பார்த்தால் பயமில்லாமல் பார்த்து ரசிக்கலாம் என்பதே அதற்கான காரணம்.

பாம்புக்களில் ஆயிரக்கணக்கான வகைகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலான வகைகளுக்கு விஷம் இல்லை. ஆனால் எந்த பாம்புக்கு விஷம் இருக்கிறது, எவற்றுக்கு நஞ்சு இல்லை என்பதை தெரிந்தவர்களுக்கு பாம்பு பயமுறுத்தும் உயிரினமாக இல்லாமல் இருக்கலாம்.

மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

ஆனால், சாதாரணமானவர்களுக்கு பாம்பு என்பது எப்போதுமே பயமுறுத்தும் உயிரினமாகவே இருக்கிறது. பாம்புகளையே தெய்வமாக வணங்கி பால் முட்டை வைக்கும் இந்தியாவில் பாம்பு கடவுளாக வணங்கப்படுகிறது.

ஆனால் பாம்புகளைப் பற்றிய செய்திகளில் நாம் அறிந்தவற்றில் பாதிக்கு மேற்பட்டவை கற்பனைதான் என்று விலங்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அழகாக தோன்றும் பாம்பு ஆபத்தையும் ஏற்படுத்தலாம் என்பதே பயத்திற்கு காரணமாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் (Social Media) பரவலாக பார்க்கப்படும் வீடியோக்களில் அதிகமானவை பாம்புகள் தொடர்பானவை என்பது பயத்துக்கும், பொழுதுபோக்குக்கும் இருக்கும் தொடர்பையே உணர்த்துகிறது.

மேலும் படிக்க | மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீளம் பாம்பு; பதற வைக்கும் வைரல் வீடியோ

தற்போது வைரலாகும் ஒரு பாம்பு வீடியோ, ஆச்சரியத்தை அளிக்கிறது. அதுவும், சில பாம்புகளும் முட்டைகளும் இருக்கும் அந்த வீடியோவில் இருக்கும் பாம்புகள் வெண்ணிற அரவங்கள்.

சர்ப்பங்கள், அதன் அருகே வைத்திருக்கும் முட்டையைப் பார்த்து சீறுகின்றன. இது முட்டை மீதான கோபச் சீற்றம் அல்ல. அவற்றின் இயல்பான சீற்றமாகவே இருந்தாலும், பாம்புகளின் உஸ் என்ற ஒலியுடனான சீற்றம், நம்மை நடுங்க வைக்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இரண்டு வெண்ணிற பாம்புகள் மற்றும் இரு கருநிற பாம்புகள் ஒன்றாக இருக்கும் ஒரு தனியிடத்தில் நான்கு முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. நான்கில் மூன்று சர்ப்பங்கள் துடிப்பாக சீறினால், ஒன்று மட்டும் இட்ஸ் நாட் மை டர்ன் என்று சொல்லி சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறது.

பாம்புகளின் சீற்றம் அச்சுறுத்தினாலும், அவற்றின் சீற்றத்தில் இருக்கும் அழகு அசர வைக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பார்த்து ரசிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | படத்தில் ஒளிந்துள்ள பாம்பு உங்கள் கழுகு பார்வைக்கு தெரிகிறதா

மேலும் படிக்க | தாகத்தால் தவித்த ராஜ நாகம்; தண்ணீர் வழங்கிய கொடை வள்ளல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News