ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது? பரூக் அப்துல்லா
2024 நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது? என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்திய அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொண்டார். அதற்கு நாடு முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டும், அதன் தொடக்கமாக சென்னையில் நடைபெறும் முக ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்துள்ளது என தெரிவித்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதும் இதே கருத்தை அவர் வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்ட ஃபரூக் அப்துல்லா, சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், நாட்டின் ஒற்றுமையில் திமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ஓரணியில் இருந்தால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரத்தில், பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்ற கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார். 3வது அணி தேவையில்லை என்ற அவர், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் படிக்க | 70 வயதில் இளைஞர்... நொடிக்கு நொடி உழைக்கும் முதலமைச்சர் - கால்வைக்காத இடங்களே இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ