சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரும்பாலான நிதி கல்வித்துறைக்கே ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பலர், தமிழ்நாட்டின் பட்ஜெட் எப்படியாவது தமிழ்ச் சமூகத்தை படிக்க வைத்துவிட வேண்டும் என்ற உறுதி நிலைப்பாட்டோடு இருப்பதாகக் கூறினர். எந்த வழியிலாவது குழந்தைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பு தமிழ்நாடு அரசிடம் இருப்பது குறித்து பொருளாதார நிபுணர்களும் புகராழம் சூட்டினர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரியும் இரு திராவிடக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் துளியும் மாற்றமில்லாமல் போட்டிபோட்டுக் கொண்டு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கும் திட்டங்களை வகுத்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி : இந்து அமைப்புகளின் செயலால் சர்ச்சை


அனைவருக்கும் கல்வி என்ற லட்சியக் கனவை எட்டியதோ இல்லையோ, ஆனால், கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வளரும் சமூகத்துக்கு இரு திராவிடக் கட்சிகளும் கடத்தியிருப்பதுதான் முக்கியமான சாதனை. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையில் தற்போது நிலவி வரும் சிக்கல் ஒரு பக்கம் சென்றாலும், இரு தரப்புகளின் மோதல்கள் ஒரு பக்கம் சென்றாலும், ‘கல்வி’ அதன் மகத்துவத்தை எப்போதும் இழப்பதில்லை. இரு திராவிட கட்சிகளின் இத்தனைக் கல்வித் திட்டங்கள் இருந்தும், தமிழகத்தின் எங்கோ ஓர் மூலையில் பட்டப்படிப்புக் கல்வியின் தேவையும், அவசியமும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தனது தந்தை வீட்டில் உயிரிழந்துக் கிடந்த நிலையிலும், ஒரு மாணவன் தவறாமல் பொதுத்தேர்வை எழுதும் மனப்பான்மையை இதிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சவேரியார்பட்டியை சேர்ந்தவர் ரட்சகர். இவர், வேடசந்தூரில் சோஃபியா என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை உடல்நலக் குறைவுக் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சோஃபியா என்ற மகளும், ராபின் என்ற மகனும் உள்ளனர். இதில், சோஃபியா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ராபின் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இருவருக்கும் தற்போது பொதுத்தேர்வு நடந்து வருகிறது. 


இன்றைய தினம் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்த நிலையில், தனது தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டுக் கிடந்த போதிலும் பொதுத்தேர்வை எழுதுவதற்காக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ராபின் சென்றார். அங்கு, பொதுத் தேர்வை எழுதி முடித்து விட்டு, பின்பு வீட்டுக்குச் சென்று தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் ராபின் செய்துமுடித்தார். நாளை சோஃபியாவிற்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இருக்கிறது. 


மேலும் படிக்க | NO Third Language: இந்திக்கு நஹி சொன்ன தமிழகம் இருமொழிக் கொள்கையே தொடரும்


நிச்சயம் பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதுவேன் என்று நம்பிக்கையுடன் சோஃபியா கூறியிருக்கிறார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரு மாணவர்களின் செயல்களைக் கண்டு அக்கிராம மக்கள் மெய்சிலிர்த்தனர்.!


எப்படியாவது படிச்சிடுங்க . தமிழ்நாடு சட்டமன்றம் இருக்கு பாத்துக்க.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR