செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.  இவர் இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் காகண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கடந்த ஒரு மாதமாக கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், அடிக்கடி தன்னை மாமல்லபுரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பணிக்கு அனுப்புவதாலும், எனது வீட்டில் இருந்து இந்த காவல் நிலையம் 50 கிலோமீட்டருக்கு மேல் இருப்பதால் தன்னால் அந்த காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்


இதுகுறித்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பளருக்கு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை என கடிதம் எழுதியுள்ளார்.  இக்கடிதத்தை கண்ட மாவட்ட காவல் காகண்காணிப்பளர் உடனடியாக அப்பெண்ணை பாதுகாக்க காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 


அந்த பெண் காவலர் தன்னுடைய கைபேசியை அனைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார், போலீசார் பெரும் முயற்சியில் அந்த பெண் கல்பாக்கம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டு உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருகழுக்குன்றம் ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்காவலருக்கு மருத்துவ ஒய்வு அளித்துள்ளார்.  பின்னர் அவரை அவர்களது வீட்டிருக்கே பத்திரமாக அழைத்து சென்று விட்டுள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அப்பெண்ணிடம் விசாரணை நடக்க உள்ளது.


ALSO READ கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR