காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்

காவல்நிலையத்தில் விசாரணையின் போது உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி 4 பேர் தப்பியோடி உள்ளனர்.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 5, 2021, 06:35 PM IST
காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளை, வேல்முருகன் உள்ளிட்ட போலிசார் கல்லணை பாலத்தில் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் 3 பேரையும் இருசக்கர வாகனத்தில் வரசொல்லிவிட்டு ஒருவனை மட்டும் போலீஸ் வாகனத்தில்  அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் விசாரனை செய்தப்போது, அவர்கள் திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த நரேஷ்ராஜு, துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ரூபன், வினீத் மற்றும், சாந்தகுமார் என்பது தெரியவந்தது. 

ALSO READ அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

பின்னர் அவர்கள் கொண்டு வந்த ஸ்கூட்டியின் சீட்டுக்கு கீழே இருந்த பையை திறந்து காட்டுமாறு உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளை தெரிவித்துள்ளார். அப்போது பையில் துணிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு நால்வரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றனர். காவல் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளர் விரட்டிச் சென்றபோது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவரை தாக்க முயன்ற போது அவர் சற்று விலகியதால் காயம் ஏதுமின்றி தப்பித்து உதவி ஆய்வாளர் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று கதவினை மூடிவிட்டு தப்பித்துக் கொண்டார். 

ஒரு உதவி ஆய்வாளர் ஒரு காவலர் இரண்டு பெண் காவலர் என மொத்தமே 4 பேர் மட்டும் இருந்ததால், 4 பேரும் தப்பிச் சென்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் காவலர்கள் வசம் இருந்த ஸ்கூட்டியை எடுக்க வந்த நரேஸ்ராஜ் என்பவனை மட்டும் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் போலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூவரும் தப்பிச் சென்ற போது பையில் இருந்த 3 பட்டாக் கத்திகள் கீழே விழுந்த நிலையில் காவலர்கள் கைப்பற்றினர். மேலும் 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற 3 பேரையும் போலிசார் தேடி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர்கள் திரைப்பட பாணியில் ஆயுதத்தைக் காட்டி தப்பிச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News