கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிசு விவகாரத்தில் தாய் பிரியதர்ஷினி கைது  செய்யப்பட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 11:58 AM IST
கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது! title=

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவின் உடல் இருந்துள்ளது. பின்பு இதுகுறித்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக, காவல்நிலையத்துக்கு இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.  இதனடிப்படையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், குழந்தை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

ALSO READ CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்! குவியும் பாராட்டு…

இந்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிசு விவகாரத்தில் தாய் பிரியதர்ஷினி கைது   செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்த  25 வயது திருமணமாகாத பிரியதர்ஷினி எனும் பெண்  திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்தபோது  தவறான உறவால் கர்ப்பம் அடைந்தவர்,  ஆலக்குடி திரும்பிய பின் வயிற்று வலி பிரச்னையால் அவரது பெற்றோருடன் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு வந்து,  மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்

வலி அதிகமானதும்  பிரசவமாகிவிடும் என்று தெரிந்த பின் மருத்துவ கல்லூரி கழிவுரையிலேயே  குழந்தையை பெற்றெடுத்து அந்த பெண் குழந்தையை கொலை செய்து போட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று காலை மருத்துவ கல்லூரி போலீசார் பிரியதர்ஷினியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  பிரியதர்ஷினி குழந்தையை கொலை செய்ததில் அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பெற்றோரும் உடந்தை என்று தெரிய வந்தால் அவர்களும் கைது செய்யப்படுவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ALSO READ பிறந்தவுடன் கழிவறையில் கொலையான 'பெண் சிசு' - காவல்துறை விசாரணை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News