அரக்கோணத்தை அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவருக்கு வயது 25. இவர் கிராமத்திற்கு வெளியில் தனக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடு கட்டி தனது தாய் சுதா(52) பெரியம்மா லதா(57) பாட்டி ரஞ்சிதம்மாள்(76) ஆகியோருடன் வசித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு, பயமுறுத்தி, வீட்டின் உள்ளே நுழைந்து, பெண்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. 60,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றனர். 


நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு ரவை சிதறி  படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் உடனடியாக சிகிச்சைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


தீரன் திரைப்பட பாணியில் நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல்துறையினர் (TN Police) விசாரனை நடத்தி மர்ம நபர்களை தேடி வத்தனர். 
இந்த வழக்கு தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர போலீசார் விசாரணை நடத்திவந்தனர். 
கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்பட்டதால் வட இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு, பின்னர் இந்த கொலை தொடர்பாக உள்ளூர் கொள்ளையர்கள் தான் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக துப்பு கிடைத்திருக்கிறது.


ALSO READ | மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை


இதில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அரக்கோணத்தை அடுத்த பாலவாய் என்ற கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஆனந்த கிருபாகரன் என்பவரது வீட்டில் கொள்ளை (Theft) அடிக்க வந்த கும்பல் வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பழைய காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வகை துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை சந்தேகத்திற்கிடமாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற சில குற்றவாளிகளும் பிடிபட்டனர். 



திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது  சின்னராசு மற்றும் 17  வயது இளம் சிறார் ஒருவர் என இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு வீச்சருவாள், ஒரு துப்பாக்கி, எல்சிடி டிவி , லேப்டாப், கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் குற்றவாளியிடம் கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதால் இந்த இரண்டு குற்றவாளிகளிடம் மேலும் 2  குற்றவாளிகள் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கூடுதல் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் துப்பாக்கி சுடுவதற்கு யூடியூப் தளம் மூலமாக பயிற்சி பெற்றதும் தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் மேற்பார்வையில் வேலூர் சரக டிஐஜி ஏசி பாபு தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் உடன் 5 தனிப்படைகளை அமைக்கப்பட்டது. தனி படையில் 4 டிஎஸ்பி 11 ஆய்வாளர்கள் 16 உதவி ஆய்வாளர்கள் 60 காவலர்கள் என பலர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தொடர்புடைய குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 60 சிசிடிவி  கேமரா வீடியோ காட்சிகள் அடிப்படை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.


ALSO READ | அன்னபூரணியை இயக்குவது கருப்பர் கூட்டம் தான்: அர்ஜுன் சம்பத்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR