மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறதாக பரவலாக புகார் எழுந்ததது.
இதையடுத்து மதுரை ஆவின் (Aavin) நிறுவனத்தில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள் , பொருள்கள் கொள்முதல் , தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் , ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ALSO READ | கொரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர்!
ஆவின் மேலாளர் , அதிகாரிகள் மற்றும் கணக்கர்கள் , பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது .
இதில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம் , ஒப்பந்தம் , பொருள்கள் விற்பனை , கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் . இதில் திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும் , தனியார் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read | ராஜீவ் கொலையாளிகளின் சலுகையை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தொண்டர்கள் கைது
அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR