தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஒரு நபர் ஆணையத்தில் இதுவரை 33 கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 1342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு (Thoothukudi Shooting) சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 34வது அமர்வு விசாரணை இன்று தொடங்கியது. இந்த விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையத்தின் 34-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கி வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போது சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு -2 காவல் கண்காணிப்பாளராகிய அருண் பாலகோபாலன் ஆஜரானார். இவர் ஏற்கனவே கடந்த 33வது கட்ட விசாரணையின் போதும் ஆஜராகி ஆணையத்தின் முன்பு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம்
இன்று நடைபெறும் 2-வது நாள் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளரும், தற்போது கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றும் செல்வ நாகரத்தினம் ஆஜராக உள்ளார். நாளை மறுநாள் 29-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனும், 30-ம் தேதி நடைபெறும் விசாரணையில் மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பனும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட 4 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார் மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் (Thoothukudi Sterlite) ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடத்திவரும் நீதி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் அரசு வேலை மற்றும் கிடைத்தால் போதாது நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார் ஆகையினால் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி அவர்கள் அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் (Edappadi Palanisamy) விசாரணை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR