நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக்கொலை
Financier Murdered: நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நிதி நிறுவனம் நடத்திவந்த கெளதம் என்பவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்படை பாதரை பகுதியை சேர்ந்த கெளதம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான இவர், வெப்படை பகுதியில் கடந்த 6 வருடங்களாக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழி மறித்த மர்ம கும்பல் கெளதமை இரு சக்கர வாகனத்துடன் கடத்தி சென்றுள்ளார். காரில் கடத்திச் செல்லப்பட்ட கெளதம் காணாமல் போனார். இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி யின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கெளதமை தீவிரமாக தேடி வந்தனர். கடத்தல் குறித்த சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. அந்த காட்சிகளை வைத்து, தனிப்படையின் ஆறு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அது கெளதம் என்று தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட கெளதமின் சடலத்தை மீட்ட போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: நாளேட்டை எரித்து ஆர்ப்பாட்டம்
இதையடுத்து குற்றவாளியை கண்டுப்பிடிக்கோரி கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து குற்றவாளி கண்டுபிடிப்பது தொடர்பான விசாரணை குறித்து போலீசாரிடம் கேட்டனர். போலீசார் அளித்த பதில் நம்பிக்கை அளிக்காததால் உறவினர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் வெப்படை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையில், கெளதம் கொலை வழக்கை விசாரித்த போலீசார், கில் நிதி நிறுவனத்தில் பணி புரிந்த வெப்படை பகுதியை சேர்ந்த முன்னாள் ஊழியர் தீபன் என்பவருடன் சேர்ந்து தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் குணசேகரன், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தை செய்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த மூவரும் கும்பலாக சேர்ந்து, கெளதமை கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த மூன்று பேரிடம் விசாரணை தொடங்கியிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு
நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறையினர் விசாரணை இல்லை என்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரிந்து 24மணி நேரம் ஆன பிறகும், இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை கொலை செய்யப்பட்ட கெளதம் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை தொடங்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கெளதம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெப்படையில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ