வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
வேலூர் பாலாற்று வெள்ளத்தில் ஒரு தாய் மற்றும் குட்டி என இரண்டு நாய் குட்டிகள் வெள்ள நீரின் மத்தியில் இருந்த புதருக்குள் சிக்கிக் கொண்டன.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவ 19 காலை முதல் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்த சூழலில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காட்பாடியில் இருந்து வேலூர் வரக்கூடிய பாலத்தின் கீழே கரைபுரண்டு ஓடிய பாலாற்று வெள்ளத்தில் ஒரு தாய் மற்றும் குட்டி என இரண்டு நாய் குட்டிகள் வெள்ள நீரின் மத்தியில் இருந்த புதருக்குள் சிக்கிக் கொண்டன.
ALSO READ தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பாஜக கட்சியை சேர்தவரிடன் 50 லட்சம் மோசடி!
இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாகவும், நாயை காப்பாற்றுவது கடிணம் என்றும் கூறிய நிலையில். பொதுமக்கள், இது தாழ்வான பகுதி தான் கயிறைக்கொடுங்கள் நாங்களே காப்பாற்றுகிறோம் என்றனர்.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முயற்சித்து பார்க்கலாம் என்று நான்கு தீயணைப்பு துறை வீரர்கள் களத்தில் இறங்கினர். ஒருவர் தனது இடுப்பில் கயிற்றைக்கட்டிக்கொண்டு நாய் குட்டி சிக்கி இருந்த புதர் பகுதிக்கு சென்று நாயை பத்திரமாக மீட்டார். குட்டியின் தாயும் தானாக தண்ணீரில் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்தது. நாய் குட்டி சிக்கிய இடம் தாழ்வான பகுதி என்பதால் இரண்டும் தப்பித்தன.
ALSO READ கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR