கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?

ஜீவ சமாதி ஆகவேண்டும் என்ற கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் கணவனை புதைத்தாரா மனைவி? போலீசார் விசாரணை  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 20, 2021, 07:14 PM IST
கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(60) இவரது மனைவி லட்சுமி(45) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 30 வயதான மகன் ராஜேஸ்வரன் துபாயில் பணிபுரிகிறார்.  25 வயதான மகள் தமிழரசி தாய் தந்தையுடன் வசித்து வந்து தனியார் ஐடி நிறுவனத்தில் பணிகிறார்.   கடந்த 17ம் தேதி இரவு நாகராஜ் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஜீவ சமாதி ஆகவேண்டும் என்று கூறியதால் முன்னதாக நாகராஜ் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் நாகராஜ் படுத்துக்கொள்ள மனைவியை மண்ணை போட்டு மூடி சமாதி போல் ஆக்கியுள்ளார்.

ALSO READ கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

கணவன் சத்தியம் வாங்கி கொண்டதாலே அதன்படி செய்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு பணிக்கு சென்றிருந்த தமிழரசி 18ம் காலை வீட்டிற்கு வந்ததும் தந்தை நாகராஜை அம்மாவிடம் கேட்டுள்ளார். வெளியில் சென்றுள்ளார் என்று கூறியதால் இரவு பணி முடித்து வந்தகலைப்பில் மகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்களாக தந்தையை காணவில்லையே என்பதால் மறுநாள் நேற்று 19ம் மீண்டும் அம்மாவிடம் தந்தை பற்றி கேட்டபோது தந்தை தன்னிடம் சத்தியம் வாங்கி கொண்டு அவர் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் படுத்துக்கொண்டு என்னை மண் போட்டு மூட சொன்னார். அவர் சொன்னபடியே நானும் செய்துவிட்டேன் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் இச்சம்பவம் குறித்து முதலில் பள்ளிகாரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற பகுதி பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இருப்பதால் பள்ளிகாரணை போலீசார் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெரும்பாக்கம் ஆய்வாளர் மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லட்சுமியை கைது செய்த போலீசார் புதைத்த நாகராஜ் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தாம்பரம் கோட்டாட்சியருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கோட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் 12:30 மணி ஆகியும் சம்பவ இடத்திற்கு வரததால்.

husband

இறந்த நாகராஜின் மனைவி மகள் உள்ளிட்டவர்களை நாகராஜ் ஜீவ சமாதி அடைந்த இடத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்ததும் நாகராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடைபெற இருக்கிறது. கணவன் சத்தியம் வாங்கியதால் உயிருடன் கணவனை புதைத்தாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் சத்தியத்தால் அவரை புதைத்த மனைவியின் செயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ALSO READ காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News