காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கன மலையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்றைய வானிலை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது கூறியது..!
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் 50 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் தென்கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 3.5 முதல் 4.3மீட்டர் உயரம் வரை எழும்பவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.