ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமம்... சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. சம்பவத்தன்று வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான சந்திரா என்பவர் கடல் பாசி சேகரிப்பதற்காக அதிகாலையே புறப்பட்டு சென்றிருக்கிறார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்தனர். கத்தி கூச்சலிட முயன்றவரை வாயை பொத்தி அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்றவர்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சந்திராவை சேலையால் கழுத்தை நெரித்துத் துடிதுடிக்க கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க தீ வைத்து எரித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதன் பின்னர், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோட அவ்வழியாக வந்தவர்கள் பாதி எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக கிடந்த சந்திராவின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்தவர்கள் கிடைத்த தடையங்களை சேகரித்து கொண்டனர். 



இதற்கிடையே, ஊரில் கலவரம் வெடித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வடமாநிலத்தவர்கள் மீது சந்தேகமடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கினர். அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள்தான் சந்திராவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கக்கூடும் என்று 6 பேரையும் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்திற்கும் தீ வைத்து எரித்தனர். 



பின்னர் இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களையும் பிடித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 



முதற்கட்ட விசாரணையின் முடிவில், வடமாநில இளைஞர்கள் 2 பேர் போதையில் சந்திராவை சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால், அந்த 2 பேர் யார் என்பது தெரியாத நிலையில் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வடகாடு மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதையடுத்து விசாரணையில், மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றதில்  ரஞ்சன் ,பிரகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார் தடையங்களை  சேகரித்தனர்.



மேலும் உயிரிழந்த மீனவ பெண்ணிடம் இருந்து தங்க  நகைகளை  திருடி விற்க முயன்று அது முடியாமல் போனதால் மண்ணில் புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் தொடர்ந்து விசாரணை நீடித்து வருகிறது.


மேலும் படிக்க | பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!


வேலூரில் ஆண் நண்பருடன் சினிமா பார்க்கச் சென்ற இளம்பெண் 5 பேர் கொண்ட கும்பலால்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, திருவண்ணாமலை அருகே 13 வயது பள்ளி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, விழுப்புரத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி 9 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. இவையெல்லாம் சமீபத்தில் தமிழகத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் சூழலிலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருவது கொடுமை. வருகிறது.  சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதாவது பெண்களுக்கு நிகழும் இதுபோன்று பாலியல் வக்கிரங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | சென்னையில் 900 பேர் பங்கேற்ற மது விருந்து: அளவுக்கு அதிகமான போதையில் 21 வயது இளைஞர் பலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR